சந்தனகட்டையை விட விலை அதிகம்! சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.40 லட்சம் மதிப்புள்ள அகில் கட்டை!
Akhil timber worth Rs 40 lakh seized at Chennai airport
சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள அகில் மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியே எங்கு உள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து விமானம் ஒன்று சென்னை வந்துள்ளது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இலங்கையை சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் சுற்றுலா பயணிகளாக சென்னைக்கு வந்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பை மற்றும் சூட்கேஸ் திறந்து சோதனை செய்து பார்த்த போது அதில் 20 பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலில் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளனர். இதற்கு அவர்கள் முன்னுக்கு மின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் பார்சல்களை சோதனை செய்தனர்.
சோதனை செய்து பார்த்தத்தில் சந்தனத்தை விட அதிக நறுமணம் தரக்கூடிய அகில் மரகட்டைகள் 20 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விலை உயர்ந்த அகில் ஆயில் பாட்டில்கள், வாசனை திரவியங்கள் 15-க்கும் மேற்பட்ட பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் இந்த மரங்களில் இருந்து வடியும் பிசின்களில் அகரந்தர் ஆயில் கிடைக்கிறது. இந்த ஆயுள் அதிக நறுமணத்துடன் கூடிய உயர் ரக வாசனை திரவியம் இது விலை உயர்ந்தது. இதனை அடுத்து எடுத்துவரப்பட்ட அகில் மரத்தின் மதிப்பு சுமார் ரூ. 40 லட்சம் என்று கூறப்படுகிறது.
பின்னர் இது தொடர்பாக மரக்கட்டைகள் வாசனை திரவியங்களை பறிமுதல் செய்தது மட்டுமில்லாமல் இலங்கையில் இருந்து கடத்தி வந்த இரண்டு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Akhil timber worth Rs 40 lakh seized at Chennai airport