அட்சய திருதி பண்டிகை..மியா பியோரா நகைகளை அறிமுகம் செய்த தனிஷ்க் நிறுவனம்! - Seithipunal
Seithipunal


அட்சய திருதியை, சித்திரைப் புத்தாண்டு  பண்டிகை தினங்களை முன்னிட்டு தனிஷ்க் நிறுவனம்  மியா பியோரா என்ற நகைகளை அறிமுகம் செய்துள்ளது.

அட்சய திருதியை, சித்திரைப் புத்தாண்டு வருவதையொட்டி தனிஷ்கின் மிஆ, ‘பியோரா’ [Fiora] என்ற புதிய ஆபரணத் தொகுப்பை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வசந்தத்தை வரவேற்கும் வகையில் செழுமையைக் கொண்டாடும் விதமாகவும் பெண்மையின் மலர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் பியோரா நகைகள் இருக்கின்றன. 

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்துக்கு வழங்கும் உயரிய அங்கீகாரமாக விளங்கும். பெண்களின் சுயவெளிப்பாடு, புதிய துவக்கங்கள், வசந்த காலத்தின் நேர்மறையான அதிர்வலைகளைப் பிரதிபலிக்கும் நகைகள் இவை. புதிய மொட்டுகளோடு இயற்கை விழிப்பதைப் போல, வசந்த காலத்தில் வரும் பண்டிகைகள் புதிய வாய்ப்புகள் தரும் உத்தரவாதங்களைக் குறிப்பதாக உள்ளது. 

பியோரா நகைகள் தொகுப்பு குறித்து மிஆ-வின் வர்த்தகப் பிரிவு தலைவர் சியாமளா ரமணன் பேசும்போது,”இன்ஸ்பயர்ட் பை யுவர் ப்ளூம்  என்ற கருத்துருவாக்கத்தினால் தூண்டப்பட்டு மிஆ பியோரா இயற்கையின் நுட்பமான கவித்துவமான மலர்கள், மலர்களின் மென் இதழ்கள், சூரியனை நோக்கி நீளும் மலர்களின் மெலிந்த காம்புகள், ஈரக்காற்றில் நடனமிடும் வண்ணத்துப் பூச்சிகள் ஆகியவற்றின் தாக்கம் பெற்று வடிவமைக்கப்பட்டுளன. இயற்கையை ரசித்து இயற்கையின் உறுதித்தன்மை பிரகாசத்துடன் வளரும் பெண்களுக்கான அங்கீகாரப் பரிசாக ஒவ்வொரு மிஆ ஆபரணமும் இருக்கும். அட்சய திருதியை, சித்திரைப் புத்தாண்டு  பண்டிகை தினங்களை முன்னிட்டு மியா பியோரா நகைகளுடன் சேர்ந்து உங்கள் தனித்துவ மலர்தலை எட்ட நாங்கள் அழைக்கிறோம்.” என்றார்..

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Akshaya Tritiya Festival Tanishq launches Mia Piora Jewellery


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->