தமிழகத்தில் கைம்பெண்கள் அதிகரிக்க காரணம் 'மது'.. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கம் நடத்திய ஆய்வில் 'பகீர்' தகவல்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கம் சார்பில், கைம்பெண்களுக்கான பாதுகாப்பு, அவர்களது பொருளாதார நிலை, மற்றும் அவர்கள் கைம்பெண்களாக மாறியதன் காரணம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு 21 வயது முதல் 51 வயதிற்கு மேலான வெவ்வேறு சாதி, மதத்தைச் சேர்ந்த கைம்பெண்களிடம் நடத்தப் பட்டது. இதையடுத்து இந்த ஆய்வறிக்கை மதுரையில் சமர்ப்பிக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையில்,  38 சதவீதத்திற்கு மேலான பெண்கள் மது காரணமாக தான் தங்களது கணவனை இழந்து கைம்பெண்களாக மாறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் 2.4 சதவீதம் பேர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பயன்பாட்டினால் தனது கணவனை இழந்துள்ளதாகவும், மேலும் 34.5 சதவீதம் பெண்கள் தங்களது கணவனை சில நோய்களின் காரணமாக இழந்துள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

மேலும் சாலை விபத்துக்கள், கொரோனா, கொலை மற்றும் இன்ன பிற காரணங்களால் மீதமுள்ள 25.1 சதவீதம் பெண்கள் தங்களது கணவர்களை இழந்து கைம்பெண்களாக மாறியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து கைம்பெண்களின் ஓய்வூதியத்தை ரூ. 5000 ஆக உயர்த்த வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள் மேம்பாட்டிற்காக தன்னாட்சி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். குளந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, கடனுதவி போன்ற திட்டங்களோடு அரசின் மதுபானக் கொள்கை குறித்தும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கத்தினர் முன் வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alcohol Is the Main Reason For Increasing Widow in Tamilnadu Research Study Says


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->