அனைத்து மாவட்டத்திலும் முதியோர் இல்லங்கள் அமைக்க கோரி மனு -அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு முதியோர் இல்லங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்து, இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது:

தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கல் சசில் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், 'பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டத்தின்படி மாநில அரசு, மாவட்டத்துக்கு ஒரு அரசு முதியோர் இல்லத்தை அமைக்க வேண்டும். 

தமிழகத்தில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டப்படி, அரசு முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றனவா என, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். 

அதற்கு அரசு, முதியோர் இல்லங்களை அரசு நேரடியாக நடத்தவில்லை என்றும், அதற்கான மானியம் மட்டும் வழங்கி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

முதியோர் இல்லங்களுக்கு அரசு, சட்ட விதிகளை அமல்படுத்த தவறிவிட்டதால் மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், மனுதாரரிடம் எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என்று கேள்வி எழுப்பினர். 

அதற்கு மனுதாரர் தரப்பில், ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்று பதிலளிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பு வாதம் தவறு எனத் தெரிய வந்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All districts old age homes petition Madras High Court orders government respond


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->