அண்ணல் அம்பேத்கர் விருது.. M.L.A எழிலன் வழங்கினார்!
Ambedkar Award Presented by M.L.A. Ezhilan
வேலூரில் சமூகத்தில் பல்வேறு துறைகளில் சேவைகள் செய்து சாதனைகள் புரிந்த சமூக ஆளுமைகளுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது.
வேலூரில் தேசிய தொழிலாளர் மையம் மற்றும் தேசிய தலித் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் பாரத்ரத்னா பி.ஆர்.அம்பேத்கரின் 134.வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.அப்போது சமூகத்தில் பல்வேறு துறைகளில் சேவைகள் செய்து சாதனைகள் புரிந்த சமூக ஆளுமைகளுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை வழங்கி வாழ்த்துரை வழங்கினார் மருத்துவர் .நா.எழிலன் M.L.A ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக திட்டக் கமிஷன் உறுப்பினர் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.அதில் தலித் மக்களுக்கும் பத்திரிகை துறையிலும் சேவைகள் செய்து சாதனைகள் புரிந்த சமூக சேவகர் பத்திரிகையாளர் திரு.அ.பால்ராஜ் (எ ) ஐஸ்வர்யன் அவர்களுக்கு பாரத் ரத்னா அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .
English Summary
Ambedkar Award Presented by M.L.A. Ezhilan