அமித் ஷா என்ன சொன்னார்! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழிசை! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் தமிழக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனை அழைத்து ஒரு விரலை நீட்டி கண்டிப்பதுபோல் எதையோ சொல்லும் காணொளி வைரலானது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்து வந்த நிலையில், அது போல் இனி பேச வேண்டாம். நீங்கள் பேசியது தவறு, மாநில தலைவருக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். வார்த்தைகளை கவனமாக பேசுங்கள், அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள் என்று அமித்ஷா தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து இருப்பார் என்று அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

மேலும், சில செய்தி ஊடகங்களும் இதுதான் நடந்திருக்கும் என்பது போலவே யூகித்து செய்தி வெளியிட்டு வந்தன.

இந்த நிலையில், ஆனது அமித் ஷா தன்னிடம் என்ன கூறினார் என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தற்போது விளக்கமளித்து, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்த அவரின் விளக்கத்தில், "2024 தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக ஆந்திராவில் நேற்று நான் நமது உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தபோது, ​​தேர்தலுக்குப் பிந்தைய கண்காணிப்பு மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி கேட்க அவர் என்னை அழைத்தார்.

அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறியது உறுதியளிக்கிறது. இது அனைத்து தேவையற்ற யூகங்களையும் தெளிவுபடுத்துவதாகும்" என்று தமிழிசை சௌந்தரராஜன்  விளக்கமளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah Tamilisai Speech full details Annamalai TN BJP


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->