தமிழ்நாட்டில் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை - தமமுக தலைவர் ஜான்பாண்டியன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன் தெரிவிக்கையில், "திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் அதிகளவில் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. இது போன்ற சம்பவங்களுக்கு தமிழ்நாடு போலீசாரும் உடந்தையாக இருக்கின்றனர்.

வி.சி,க தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் என்னை போன்ற தலைவர்களை கொலை செய்துவிட்டால் பெரிய ஆளாகிவிடலாம் என்ற எண்ணம் சிலரிடம் இருக்கிறது. 

எங்களைப் போன்ற தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு சிபிஐக்கு மாற்றினால் தான் உண்மை வெளிவரும்.

ஏழை, எளிய மாணவர்கள் படித்து மருத்துவர்கள் ஆவதற்கு காரணம் நீட் தேர்வு தான். அதானல் நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும். அல்லது ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

மாஞ்சோலையில் 5 தலைமுறைகளாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். மாஞ்சோலை மக்களுக்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போராட்டத்தை முன்னெடுக்கும்” என்று ஜான்பாண்டியன் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amizhaga Makkal Munnetra Kazhagam JohnPandian press meet in nellai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->