மக்கள் சிரமம்! அம்மா உணவகத்தை அப்புறப்படுத்தக்கோரி வழக்கு! மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னை : சாலையோரத்தில் உள்ள அம்மா உணவகத்தை அப்புறப்படுத்தக்கோரிய வழக்கு குறித்து சென்னை மாநகராட்சி 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு.

தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. அம்மா உணவகங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்படுகிறார்கள். அதனால் அம்மா உணவகங்களை சீரமைக்க அரசு சமீபத்தில் நீதி ஒதுக்கியது.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.பி.ஆர் மேனன் என்பவர் சென்னை அசோக் நகர் பகுதியில் சாலையோர உள்ள அம்மா உணவகத்தால் பொதுமக்கள் நடைபாதையில் நடக்கமுடியவில்லை அதனால் சாலையோர உள்ள அம்மா உணவகம், மின்சார பெட்டிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தகோரி பொது நல மனு தாக்கல் செய்தார்.

மேலும், அந்த மனுவில், சென்னை அசோக் நகர் மற்றும் கே.கே நகர் சாலை நடைபாதையில் அம்மா உணவகங்கள், மின்சார பெட்டிகள், பொது கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இடையூறாக உள்ளது. மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின்சார பேட்டிகள் சாலையோர நட பாதையில் உள்ளது.

இது குறித்து மாநகராட்சிக்கு புகார் அளித்தும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அம்மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர. மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும் படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amma case to dispose of the restaurant Corporation directed to respond


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->