கழக செயலாளர், மாவட்ட செயலாளர் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் - டிடிவி தினகரன் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

அதன்படி, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட கழகங்களுக்கு பொறுப்பாளர்களாக, கழக அமைப்பு செயலாளரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தொட்டியம் M.ராஜசேகரன் அவர்கள், கழக அமைப்பு செயலாளர் K.சிவசண்முகம் அவர்கள், கழக அமைப்பு செயலாளர் S.K.தேவதாஸ் அவர்கள், கழக அமைப்பு செயலாளர் D.விடங்கர் அவர்கள், கழக அமைப்பு செயலாளர் M.P.நடேசன் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

கழக துணைப்பொதுச்செயலாளரும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான M.ரெங்கசாமி அவர்களுடன் இணைந்து இவர்கள்
பணியாற்றுவார்கள். 

புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட கழகங்களுக்குப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளராக, தொட்டியம் திரு.M.ராஜசேகரன் அவர்கள் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக செய்தி தொடர்பாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்) இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக அமைப்பு செயலாளருக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை இணைச் செயலாளராக, G.M.முரளி அவர்கள் (பாரதி நகர், 13வது தெரு, இராமநாதபுரம்) இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக இளைஞர் பாசறை இணைச்செயலாளருக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இவ்வாறு அந்த அறிவிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK TTV Dhinakaran Announce 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->