பக்ரீத் பண்டிகை! தமிழ்நாட்டில் வரலாறுகணாத வகையில் 5920 பேர் ஹெஜ் பயணம்!! - Seithipunal
Seithipunal


சென்னை : தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 5920 பேர் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஹெஜ் பயணம் செய்துள்ளதாக இந்திய ஹெஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள மசூதியில் தொழுகை செய்வதற்காக இந்திய ஹெச் கமிட்டி தலைவர் அபூபக்கர் வருகை தந்தார். தொழுகைக்குப் பிறகு செய்தியர்களை சந்த்தித்து பேட்டியளித்த  அபூபக்கர் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.


 
ஹஜ் பயணத்திற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழகத்தில் இருந்த மட்டும் இதுவரை இல்லாத அளவாக 5 ஆயிரத்து 920 பேர் பயணம் செய்துள்ளதாக கூறினார்.

சவுதி அரேபியாவில் இந்திய தன்னார்வலர்களுக்கு பாஸ் வழங்காததால் இந்திய ஹாஜிகள் சிறிது சிரமங்களை சந்தித்ததாகவும் எனினும் இறைவனின் அருளால் ஹாஜிக்கல் ஹச் பயணத்தை பூர்த்தி செய்து கொண்டிருப்பதாக கூறினார். இஸ்லாமியர்கள் அனைவரும் சமைத்த உணவை பிற மத சகோதரர்களே வழங்கிட வேண்டும் என கூறினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An unprecedented 5920 people traveled to the Hej in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->