தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் மூடப்படுமா..?!! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!!
Anbil Mahesh explains that primary schools will not be closed in TN
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்செந்தூர் முருகர் கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்படும் பொழுது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் அனைத்து பள்ளிகளிலும் வழக்கமாக நடைபெறும் அரையாண்டு தேர்வு போல் இந்த ஆண்டும் நடைபெறுகிறது. அரையாண்டு தேர்வுக்கு விடுமுறை விடுவது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. அரையாண்டு தேர்வுகள் முடிந்ததும் முடிவு செய்யலாம் என தெரிவித்தார்.
![](https://img.seithipunal.com/media/govt_School_picxy_1200_0-h5mem.jpg)
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப் பள்ளிகளை இணைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே உள்ள தொடக்கப் பள்ளிகள் மூடப்படுமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் "எந்த ஒரு தொடக்கப் பள்ளியும் கண்டிப்பாக மூடப்படாது. இன்னும் அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்யப்படுகிறது. ஏற்கனவே தொடக்கப் பள்ளிகளில் 10 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதனால் தொடக்கப் பள்ளிகள் மூடப்படாது" என செய்தியாளருக்கு பதில் அளித்தார்.
English Summary
Anbil Mahesh explains that primary schools will not be closed in TN