தீபாவளி மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அக்டோபர் 24-ஆம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய நாள்களான இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) வழக்கமான அரசு விடுமுறை நாள்களாகும். திங்கள்கிழமை தீபாவளி என்பதால் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள்(அக்.25) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு மறுநாளும் (செவ்வாய் - அக்.25) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும், இதுகுறித்து கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிக்கையில், "தீபாவளிக்கு மறுநாள் சேர்த்து விடுமுறை அளிப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

இந்த விடுமுறை கோரிக்கையானது பள்ளி கல்வித்துறைக்கு மட்டுமில்லாமல் தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்படி உள்ளதால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார்" அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbil Mahesh Say about Diwali 2022 leave


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->