காலை உணவுத் திட்டம்... பெயர் மாற்ற வேண்டுமா? அன்பில் மகேஷ் திடீர் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal



மதிய உணவு திட்டத்தின் முன்னோடி காமராசர் பிறந்த நாளான நேற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். 

பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் உணவு பரிமாறிய பிறகு பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து அவரும் உணவருந்தி மகிழ்ந்தார். இந்நிலையில் காலை உணவு திட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் காலை உணவு திட்டம் என பெயரிட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த திட்டமான முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை இன்று ஊரக பகுதியில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர் . ஒட்டுமொத்தமாக 34 ஆயிரத்து 987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைகின்றனர். 

இந்த திட்டம் இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் தெரிவித்ததை இங்கே மீண்டும் பதிவு செய்கிறேன். இந்த மகத்தான திட்டத்திற்கு ''மு.க. ஸ்டாலின் காலை உணவு திட்டம்'' என பெயர் வைக்க வேண்டும். மேலும் இந்த திட்டமானது கடல் தாண்டி உலகம் முழுவதும் பரவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbil Mahesh says breakfast scheme named changed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->