இன்னும் ஓரிரு நாட்களில்.. மாணவர்களே பரீட்சைக்கு தயாரா? அமைச்சர் கொடுத்த அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதாலும், நீட் போன்ற போட்டி தேர்வுகளும் நடைபெற உள்ளதாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முன்கூட்டியே நடத்த வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்ட நிலையில் இந்த தகவலை தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் பொதுத்தேர்வு நடைபெறுவதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அதற்கு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம். அந்த வகையில் மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AnbinMahesh said public exam date announcement with in few days


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->