ஒரே மாதத்தில் 12 லட்சம் கோடி மக்களின் பணம் இழப்பு! இரு விதமான விசாரணை கோரும் அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "தமிழக அரசு வருகின்ற நிதிநிலை பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டில் கனிம வளங்களை வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ய கூடாது என்ற ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும். தற்போது இயங்கக்கூடிய மணல் குவாரிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு, வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் இருக்கக்கூடிய கனிம வளங்கள் தமிழக மக்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.

மத்திய அரசின் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நாடு முழுவதுமே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் இதில் சிக்குவதில்லை. எனவே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு (பாஜகவின் ஒரு அங்கமாக அமைப்பாக சிபிஐ, இடி.., செயல்படுகிறது) உண்மையாகத்தான் இருக்கிறது.

அதானி விவகாரத்தில் இரண்டு விதமாக விசாரணை செய்ய வேண்டும். 
* ஒன்று ஹிட்டன் பெர்க் அறிக்கை இந்த நேரத்தில் வெளியானதற்கான காரணம் என்ன? 
* இரண்டாவது ரிட்டன் பார்க் அறிக்கையில் வந்த குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்.

இப்படி விசாரணை செய்வதில் எந்த தவறும் இல்லை. ஒரே மாதத்தில் மக்கள் 12 லட்சம் கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளனர். இதில், எல்ஐசியின் இழப்பு மட்டும் 55 ஆயிரம் கோடி ரூபாய். இது மக்களின் பணம். ஸ்டேட் பேங்க் கடன் கொடுத்துள்ளது. இதனை விசாரணை செய்வதில் என்ன பிரச்சனை இருக்கிறது? உச்சநீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு இருக்கிறது. நல்ல தீர்ப்பாக வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani Ramadoss Say About Adani scam issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->