இடைத்தேர்தலுக்கு பதிலாக நேரடி எம்எல்ஏ., நியமனம் - அன்புமணி இராமதாஸ் கொடுக்கும் அசத்தல் ஐடியா!
Anbumani Ramadoss Say About By Election new method
நேற்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துவது, "ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை பொருத்தவரை நாங்கள் ஏற்கனவே தெளிவாக அறிவித்து விட்டோம். நாங்கள் இந்த இடை தேர்தலில் போட்டியிடப் போவதுமில்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை.
எங்களுடைய பணியை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். நீர் மேலாண்மை, விவசாய பிரச்சனைகளுக்கு எங்களுடைய நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறோம். மற்ற கட்சிகள் இந்த இடைத்தேர்தலுக்காக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இடைத்தேர்தல் தேவையில்லாத ஒன்று.
இடைத்தேர்தல் எப்போது தேவை என்றால், அந்த ஒரு சீட்டு, இரண்டு சீட்டு மெஜாரிட்டி கிடைக்கின்ற ஒரு சூழலில் இருந்தால் தான் இடைத்தேர்தல் அங்கு வர வேண்டும். இப்போது நடக்கும் இந்த இடைதேர்தலால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை. ஆதலால் இந்த தேர்தல் தேவையில்லை.
எந்த தொகுதியில் கட்சி சார்ந்தவர் இறந்திருக்கிறார்களோ? அவர்கள் கட்சி தலைமை,அந்த கட்சியை சார்ந்தவர் ஒருவரை நியமனம் செய்யக்கூடிய அந்த அதிகாரம் இருக்க வேண்டும். அதற்க்கு ஏற்ப சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். இதை நாங்கள் 15 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதனை ஒருமித்த கருத்தாக அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்ல வேண்டும்.
இந்த இடைத்தேர்தலால் நேரம், பொருள் செலவு மட்டுமில்லாமல், அமைச்சர்கள் ஒரு மாதமாக அங்கே தான் சுற்றிக் கொண்டிருக்கப் போகிறார்கள். இந்த ஒரு மாதமும் தமிழ்நாட்டின் நிர்வாகம் ஸ்தம்பித்து தான் இருக்க போகிறது" என்று, அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
Anbumani Ramadoss Say About By Election new method