அடேய்களா! நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம்! ஆளுநர் மாளிகை, தமிழக அரசுக்கு பறந்த புகார்! - Seithipunal
Seithipunal


நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்ணா பல்கலை கழகம் பெயரில் போலியாக இதனை ஒரு கும்பல் வழங்கியுள்ளது.

மேலும் இந்த கும்பல், இசையமைப்பாளர் தேவாவுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் போலியாக பட்டம் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து, பல்கலை., சார்பாக ஆளுநர் மாளிகை, தமிழக அரசுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவிக்கையில், "அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து போலீசில் புகாரளிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதியையும், அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகையும், அரசும் அறிவுறுத்தி இருக்கிறது. இதனை காரணாமாக ஆளுநரின் செயலாளர் உயர்கல்வித்துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna University fake Dr


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->