கள்ளசாராயத்தால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் நிவாரணம் - அண்ணாமலை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:- 

”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 40 பேர் உயிரிழந்துள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் பாக்கெட், பாக்கெட்டாக சாராயம் விற்பனை நடைபெற்றிருப்பதை, அரசு வேடிக்கை பார்த்திருப்பதால் இந்தத் துயரம் நேர்ந்துள்ளது.

நீதிமன்றம், காவல் நிலையம் இருக்கும் இடத்திலேயே சாராய விற்பனை அமோகமாக கிடைக்கிறது. கிராம பகுதியில் கள்ளச்சாராய உயிரிழப்பு நடக்கவில்லை. நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. அரசின் மெத்தனப்போக்கை இது வெளிப்படுத்துகிறது. அரசை பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது. 

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 லட்சம் பாஜக சார்பாக வழங்கப்படும். அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும். கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்பிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்” என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai 1 lakhs compensation announce to kallakurichi died peoples family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->