தமிழர்களின் கலாச்சார விழாக்களை தடை செய்வதா... திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா கோபச்சந்திரம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என 2000க்கும் மேற்பட்டோர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வானங்களை மறித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதனை அடுத்து இன்று காலை போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். இதனால் கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போர்க்களமாக காட்சியளித்தது. 

இதனால் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைக்க முயன்றனர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிருஷ்ணகிரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி எருது விடும் திருவிழாவிற்கு பொங்கல் தினம் தொடங்கி பல வாரங்களாக அனுமதி கேட்டும் அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது திறனற்ற திமுக அரசு.

அனுமதி கொடுப்பதும், மறுபடியும் தடைசெய்யும் விதமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருப்பதால் ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் தற்பொழுது மீண்டும் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது போல தமிழர்களின் கலாச்சார விழாக்களை ஒவ்வொன்றாக தடை செய்வதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது.

இவர்கள் ஆட்சிக்கு வரும் முன் எருது விடும் திருவிழா தடை செய்யப்படாது என்று கூறிவிட்டு தற்பொழுது ஆட்சிக்கு வந்ததும் தடை விதிக்க முற்படுகின்றனர்.

போராட்டம் நடத்தி தான் காலகாலமாக நடந்து வரும் விழாக்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற நிலைக்கு பொதுமக்களை தள்ள வேண்டாம் என்றும் எருது விடும் திருவிழாவிற்கு அனுமதி கூறி அத்தனை கிராமங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை எச்சரிக்கிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai condemns denial of permission for Krishnagiri bull race festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->