அண்ணாமலைக்கு திமிரு,ஆணவம்! வெறுப்பு அரசியலை தவிர ஒன்றுமில்லை - செல்வப்பெருந்தகை! - Seithipunal
Seithipunal


சென்னை : முதலில் அண்ணாமலை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்ததாவது, பாஜக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டாலும் தொடர்ந்து அண்ணாமலை வெறுப்பு அரசியலை செய்து வருகிறார்.

முதலமைச்சர் மீது அவதூறு பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எத்தனையோ அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள் இவரை போல் யாரிடமும் வெறுப்பு, திமிரும், ஆணவமும் இல்லை.

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கிண்டல் செய்கிறார். மோடி எத்தனையோ முறை வெளிநாடுகளுக்கு செல்கிறார் முதலீடுகளைக் கொண்டு வந்தாரா? தமிழக அரசியலில் தோற்றுப்போனவர் இப்போது உலக அரசியல் செய்யப் போகிறார். 

முதலில் அண்ணாமலை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்குதான் ஆதரவாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai is doing hate politics Selvaperunthagai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->