#தமிழகம் || மளிகை கடை, டீ கடை சூறையாடல்., போதை கும்பல் அட்டூழியம்.!
annamalai nagar tea shop attacked
சிவகங்கை அடுத்த அண்ணாமலை நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக ரகுநாதன் என்பவர் மளிகை கடை மற்றும் டீ கடை நடத்தி வந்துள்ளார். இவர் இவருக்கு துணையாக இவரின் மனைவியும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

ரகுநாதனின் கடைக்கு அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், தினமும் 10 க்கும் மேற்பட்டோர் மது அருந்தி வந்துள்ளனர். இதுகுறித்து ரகுநாதன் சிவகங்கை எஸ்பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து இறங்கிய மூன்று பேர் கொண்ட கும்பல், ரகுநாதனின் மளிகை கடை மற்றும் டீ கடையை அடித்து நொறுக்கினர்.

மேலும் கடையில் இருந்த ரகுநாதனின் மனைவியையும் அந்த கும்பல் தாக்கி உள்ளது. இதனால் படுகாயம் அடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியான முதல் கட்ட தகவலின்படி, ரகுநாதன் எஸ்பியிடம் அளித்த புகார் குறித்து உள்ளூர் போலீசார் போதை ஆசாமிகளிடம் போட்டு கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி கும்பல் கடையை சூறையாடியது தெரிய வந்துள்ளது.
English Summary
annamalai nagar tea shop attacked