ரகசிய கூட்டணியில் ''பங்காளி கட்சிகள்'' - அண்ணாமலை பரபரப்பு பதிவு! - Seithipunal
Seithipunal


தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,

தமிழகத்தில் ஜனநாயகம் எப்படி இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் தான் உள்ளது. ஊழல் குடும்ப ஆட்சி திளைத்து ஒரு குடும்பத்திற்காக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. 

தமிழக அரசாங்கம் கடந்த 33 மாதங்களாக கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றை நடத்துகிறது தவிர மக்களுக்கான அரசியல் இல்லை. 

முதலமைச்ச மு.க. ஸ்டாலின் மூன்று முறை வெளிநாடு பயணம் சென்றும் ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை. உத்தர பிரதேசம் ரூ. 33 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ள உள்ள நிலையில் தமிழகம் ரூ. 6.60 லட்சம் கோடி பெற்றுள்ளதாக தெரிகிறது. 

ஆனால் முதலீடு வந்து சேரவில்லை. மத்திய அரசின் திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் பெயர் மாற்றி வைத்துள்ளார்கள். 

தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை என தெரிவித்துள்ளார்கள். இரண்டு திராவிட கட்சிகளும் ஊழலுக்கு இலக்கணமாக தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. 

கட்சியின் வளர்ச்சியை கண்டு பயந்து இரண்டு பங்காளி கட்சிகளும் (திமுக-அதிமுக) ரகசிய கூட்டணி வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai post goes viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->