ஆசிரியை, வழக்கறிஞர் கொலை.. முதலமைச்சர் வெட்கப்பட வேண்டும் - அண்ணாமலை..!
annamalai speech about teacher and lawyer murder
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், இன்றைய தினமே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:- "தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் பேரழிவு சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது. தமிழகத்தை சட்டமற்ற காடாக மாற்றியதற்கு மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். பிரச்சினைகளைத் திசைதிருப்புவதை விட இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை நாம் காண முடியாது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
annamalai speech about teacher and lawyer murder