பிரதமர் மோடியே சொல்லிட்டாரு - உற்சாகத்தில் அண்ணாமலை! கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்து மழை!
Annamalai thanks to TN NDA Alliance Partys
டெல்லியில் இன்று நடந்த தேசிய ஜனநாயகக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவரின் அந்த உரையில், "நான் தமிழ்நாடு மாநில தேசிய ஜனநாயக கூட்டணியினருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். அங்கு நமது தேசிய ஜனநாயக கூட்டணிக் குடும்பம் பெரிதாக வளர்ந்து இருக்கிறது.
அங்கு பல கூட்டணி, தேர்தல் களம் கடினம் என்று தெரிந்தும், நம் தேசிய ஜனநாயக கூட்டணியின் கொடியை உயரப் பறக்க விடுவதில் உயிரைக் கொடுத்து உழைத்தார்கள். அதனால் தான் இன்று தமிழ்நாட்டில், நம்மால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாவிட்டாலும், வாக்கு சதவீதம் உயர்ந்துள்ள வேகத்தைப் பார்த்தாலே, அது மிகத் தெளிவாக தமிழகத்தில் நாளை என்ன நடக்கப் போகிறது எனகிற செய்தியை சொல்கிறது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இன்றைய தினம், டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்குகள் சதவீதம் அதிகரித்திருப்பதைக் குறிப்பிட்டுப் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் முழு உழைப்பை அளித்த, தமிழ்நாடு பாஜக , பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு மருத்துவர் இராமதாஸ், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு GK வாசன், அமமுக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன், அதிமுக உரிமை மீட்புக் குழுவின் தலைவர் திரு ஓபிஎஸ், புதிய நீதிக் கட்சியின் தலைவர் திரு AC ஷண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு பாரிவேந்தர், தமமுக தலைவர் திரு ஜான் பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு தேவநாத யாதவ் அனைவரையுமே, நமது பிரதமர் அவர்களின் பாராட்டுக்கள் சேரும்.
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, வருங்காலத்தில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் மேலும் பல மடங்கு உயர்வது உறுதி" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai thanks to TN NDA Alliance Partys