திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்:
annamalaiyar maha deepam
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கடந்த 17 ஆம் தேதி தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை, மாலை பிரகாரத்தில் சாமி அம்மன் பஞ்சமூர்த்திகள் உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 10 ஆம் திருநாளான இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் கோவில் மூலவர் சந்நிதியில் உள்ள அர்த்தமண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்படும் பின்னர் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது.
பின்னர் பிற்பகல் 3:30 மணியளவில் மகாதீபம் ஏற்றப்படுவதற்கு முன்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கொப்பரையில் காடா துணி நிரப்பப்பட்டு சுமார் 175 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 650 கிலோ நெய் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படும் நிலையில் 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் காட்சி அளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதிடம் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.