புதுச்சேரி விஷ வாயு சம்பவம் - மேலும் ஒரு பெண் மயக்கம் !! - Seithipunal
Seithipunal



புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் நேற்று முன்தினம் வீட்டின் கழிவறையில் இருந்து ஹைட்ரஜன் சல்பேட் விஷ வாயு பரவியதால் புதுநகர் 4ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பள்ளி மாணவி உட்பட 3 பெண்கள்  மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அரசுத் தரப்பில் அறிவுறுத்தப் பட்டது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் அவர்களுக்கு தற்காலிக கழிவறைகள் அரசு ஆரம்ப பள்ளி அருகே அமைக்கப் பட்டுள்ளது. வருவாய்த்துறை புதுநகர் பகுதி மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்து வழங்கி வருகிறது. இதையடுத்து புதுநகர் 4ஆவது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் மூடியினை பொதுப்பணித் துறையினர் அகற்றியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதே 4ஆவது தெருவில் வசித்து வரும் 38 வயதாகும் புஷ்பராணி என்பவர் கழிவறைக்கு சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதையடுத்து அப்பகுதிக்கு மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் பரிசோதனை செய்ததில் பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து இருந்ததுடன் மூச்சு விட சிரமம் இருப்பதும் கண்டறியப் பட்டது.

இதையடுத்து அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another One Women Fainted in Pudhucheri Piosionous Effluent Incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->