கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வீட்டில் நடைபெற்ற சோதனை - ஆறு கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாக இருந்த பிரபு, வருமானத்தை மீறி அதிகளவு சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், நேற்று அதிகாலை முதல் கள்ளக்குறிச்சி தியாகதுருவத்தில் உள்ள பிரபுவின் வீடு, பால் பண்ணை, அவரது தந்தையின் வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் உள்ளிட்ட 9 இடங்களில்  லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

நேற்று நள்ளிரவில் முடிவுக்கு வந்த இந்த சோதனை குறித்த விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் வழக்கில் முன்னாள் எம்எல்ஏ பிரபுவுக்கு சொந்தமான வீடு உட்பட ஒன்பது இடங்களில் நடைபெற்ற சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும்,  பிரபு வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் சொத்து மதிப்பு ஐந்து கோடியில் இருந்து ஆறு கோடி ரூபாய் வரையில் இருக்கும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 16 கோடி மதிப்பிலான 47 ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களை குறி வைத்து சோதனை நடத்தி வருவதால் அடுத்தது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anti corruption raid in kallakurichi admk mla prabhu house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->