இலவசமாக ஸ்மார்ட் போன் வேணுமா? - அப்போ உடனே அப்ளை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் விதமாக ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டதையும் அரசு செயல்படுத்தி வருகிறது. 

இந்த இலவச ஸ்மார்ட் போன் பெற சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "வடசென்னைக்குட்டபட்ட பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் இலவச ஸ்மார்ட் போன் பெற இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

யாரெல்லாம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* விண்ணப்பத்தாரர்கள் செவித்திறன் பாதிக்கப்பட்ட அல்லது பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட 80% 100% உள்ள மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 

* இளநிலை பட்ட படிப்பு மற்றும் முதுநிலைபட்டபடிப்பு பயிலும், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்ககலாம்.

* 18 வயது நிறைவு அடைந்த பட்டயபடிப்பு /polytechnic ITI பயிற்சி பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து அரசு ஊதியம் பெறும் மாற்றுத்திறனாளியாக இருத்தல் கூடாது.

* இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் அதிகபட்ச வயது 70 ஆகும்.

மேற்கண்ட அணைத்து தகுதியும் உடையவர்கள் ‘இ – சேவை’ மையத்தின் வாயிலாக, https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் தங்களது விபரங்களை பதிவேற்றம் செய்யலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apply tamilnadu government smart phone scheme


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->