பொய்யுரைத்த பிரதாப் ரெட்டி.! ஒத்து ஊதிய அப்போல்லோ நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


அப்போல்லோ மருத்துவர் பிரதாப் ரெட்டிக்கு ஒன்றும் தெரியாது! 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலா அவர்களின் அவருடைய உறவினர்கள் மற்றும் அதிமுகவின் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனை மருத்துவ குழுவினர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையானது இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவ்வப்பொழுது அப்போலோ மருத்துவமனை அறிக்கையினை வெளியிட்டு வந்தது. மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை தேறி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் எப்பொழுது வேண்டுமானாலும் ரடிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகி மருத்துவர் பிரதாப் ரெட்டியும் ஜெயலலிதா அவர்களின் உடல்நல குறித்து பல்வேறு தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். 

ஆனால் பிரதாப் ரெட்டி ஜெயலலிதா அவர்களின் உடல்நலம் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியாமல் ஊடகங்களுக்கு பொய்யான செய்தியை பரப்பியதாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. மேலும் அப்பல்லோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஜெயலலிதா எப்பொழுது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் செய்யலாம் என மருத்துவமனை தரப்பிலிருந்து வெளியிட்ட அறிக்கையும் தவறானது எனவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Appolo hospital lie to say that jayalalitha can discharge anytime


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->