ஆழ்வார்பேட்டை | ரயில் நிலையத்தில் வாலிபரை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல்! விசாரணையில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவரது உறவினர் வீடு, அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள ஏவி.எம் சர்ச் பகுதியில் உள்ளது. 

பிராங்கிளின் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். செங்கல்பட்டு ரயில்கள் இருக்கும் இந்த பிளாட்பாரம் தற்போது பயன்படுத்தாமல் உள்ளது. 

நேற்று இரவு பிராங்கிளின் இந்த வழியாக அவரது உறவினர் வீட்டுக்கு சென்ற போது, அங்கு வந்த மர்ம கும்பல் இவரை சரமாரியாக வெட்டினர். 

அவர்களிடம் தப்பி ஓடிய பிராங்கிளின் உடலில் ஏற்பட்டுள்ள படுகாயங்களால் சரிந்து கீழே விழுந்தார். பின்னர் அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த பயணிகள் அலறியடித்து சிதறி ஓடினர். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் நகர போலீசார் படுகாயம் அடைந்த பிராங்க்ளினை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கிருந்து பிராங்கிளின் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பிராங்கிளின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிராங்கிளின் தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். 

அப்போது சென்னையில் இருந்த சில பேருடன் முன்விரோதம் இருந்துள்ளது. அதன் காரணமாக தான் தற்போது பிராங்கிளினை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாக்கியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arakkonam railway station youth murder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->