திருத்தணி, அரக்கோணம் வழி ரயில் சேவையில் மாற்றம்.!! எந்தெந்த ரயில்.? எப்போது மாற்றம்.? முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்திலும் அரக்கோணம் யார்டிலும் பராமரிப்பு பணி காரணமாக வரும் ஆகஸ்ட் 23 மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய தேதிகளில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அதன்படி,

1) மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் ரயில் எண் : 43407 வரும் ஆகஸ்ட் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து கடம்பத்தூர் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

2) அரக்கோணத்தில் இருந்து 100 மார்க்கெட் வரை இயக்கப்படும் ரயில் எண் : 66008 வரும் ஆகஸ்ட் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக கடம்பத்தூரில் இருந்து மூர் மார்க்கெட் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

3) மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் ரயில் எண்: 43409 வரும் ஆகஸ்ட் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலமூ ர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் வரை பதில் சிறப்பு முறையில் இயக்கப்படுகிறது.

4) திருத்தணியில் இருந்து மூர் மார்க்கெட் வரை இயக்கப்படும் ஒன் ரயில் எண் : 43510 முழுமையாக ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக திருவள்ளூரில் இருந்து மூர் மார்க்கெட் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

5) அரக்கோணத்தில் இருந்து மூர் மார்க்கெட் வரை இயக்கப்படும் ரயில் எண்: 43418 முழுமையாக ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் கடம்பத்தூரில் இருந்து மூர் மார்க்கெட் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

6) மூர் மார்க்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் ரயில் எண் 43507 முழுமையாக ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

7) அரக்கோணத்தில் இருந்து மூர் மார்க்கெட் வரை ரயில் எண் 43420 முழுமையாக ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் திருவள்ளூரில் இருந்து மூர் மார்க்கெட் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

8) மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் ரயிலின் 43411 முழுமையாக ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் மூர் மார்க்கெட்டில் இருந்து கடம்பத்தூர் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

9) திருத்தணியில் இருந்து மூர் மார்க்கெட் வரை இயக்கப்படும் ரயில் எண் 43 51 2 முழுமையாக ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் கடம்பத்தூரில் இருந்து மூர் மார்க்கெட் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

10) அதே போன்று மூர் மார்க்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் எண்: 06727 மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் வரை மட்டும் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக மூர் மார்க்கெட்டில் இருந்து கடம்பூர் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

மேற்கண்ட அனைத்து சிறப்பு ரயில்களும் நேர மாற்றம் இன்றி ரத்து செய்யப்பட்ட ரயில் நேரப்படி குறிப்பிட்ட இடத்திலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arakkonam Train service changed on August 23rd and 30th


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->