அரக்கோணம் அருகே ஒரு ஊரே சேர்ந்து ஒருவரை தாக்கிய சம்பவம்! பலியானதால் சிக்கிய 3 பேர்! - Seithipunal
Seithipunal


அரக்கோணம் அருகே திருட வந்த நபரை ஊர் மக்கள் சேர்ந்து தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் அருகே பரமேஸ்வர மங்களம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் இளைஞர் ஒருவர் திருட முயன்று உள்ளார்.

அப்போது அவரை பிடித்த பொதுமக்கள் அவரை தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த அந்த இளைஞரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அப்போது அந்த நபர் வழியிலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இது திருடியதாக கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் அரியலபாடியை சேர்ந்த மூர்த்தியின் மகன் திருமாதேஸ்வரன் (24 வயது) என்பது தெரியவந்துள்ளது.

திருமாதேஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. மேலும் திருமாதேஸ்வரன் பலியானது தொடர்பாக மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arakonam Yong man killed people attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->