கதறாதீங்க, பதறாதீங்க.. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் - திமுகவினருக்கு பதிலடி கொடுத்த அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal


பரங்கிமலை கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அதை வைத்து HDFC வங்கியில் 34 கோடி கடன் வாங்கி அங்கே கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக அறப்போர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசு இன்று அந்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுள்ளது. 

மேலும் இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்த அரசு நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த அரசு ஊழியர்கள் யார்? இந்த அரசு நிலத்தை வைத்து கடன் வாங்கி கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்ட ஆக்கிரமிப்பாளர்கள் யார்? இவர்களுக்கு என்ன தண்டனை? என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு திமுகவினர் மற்றும் திமுகவின் ஆதரவாளர்கள் "இதில் அதிமுக பேரே வரலையே? எடப்பாடி பேரும் வரல? பத்திரப்பதிவுத்துறை அதிமுக அமைச்சர் பேரும் வரல? எழுதினால் கை சுளுக்கு ஏற்பட்டு விடுமோ? என்றெல்லாம் அறப்போர் இயக்கத்தை நோக்கி கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்க்கு பதிலடி கொடுத்து அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

அதிமுக ஊழல்ன்னு சொல்லுங்க 

சரி, அதிமுக ஆட்சியில் நடந்த 2028 கோடி ரேஷன் ஊழல் புகார் மீது விசாரணை நடத்தி FIR போட்டு அந்த ஊழலில் ஈடுபட்ட கிறிஸ்டி நிறுவனத்தை தடை செய்தீர்களா?

* இல்லை. 

சரி, அதிமுக ஆட்சியில் மோசமான தரத்தில் கட்டப்பட்டு பூச்சுவேலை இடிந்து விழுந்த சென்னை புளியந்தோப்பு KP Park கட்டிடத்தை கட்டிய PST Empire நிறுவனத்தை தடை செய்து விட்டீர்களா?

* இல்லை. அவர்களுக்கு மேலும் ஒரு டெண்டர் கொடுத்து இருக்கிறோம். 

சரி, முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உதவியாளராகவும், அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் தலைமை செயலாளராகவும் இருந்த ராம மோகன ராவ், அரசு மருத்துவமனை பராமரிப்பு டெண்டரில் செட்டிங் செய்து ஊழல் செய்த புகாரில் அவர் மீது FIR போட்டீர்களா?

* இல்லை. 

சரி, முன்னாள் அதிமுக முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீது அறப்போர் கொடுத்த சொத்து குவிப்பு புகார் மீது FIR பதிவு செய்தீர்களா?

* நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் செய்யவில்லை. 

சரி, அதிமுக ஆட்சியில் நடந்த 6066 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகள் மற்றும் அதானி மீது FIR பதிவு செய்தீர்களா?

* 1.5 வருஷம் முன்னாடி இதை விசாரிக்க DVAC கேட்ட அனுமதிக்கே இப்போ தான் ஒப்புதல் கொடுத்து இருக்கோம். அதானி ஊழல் பற்றி எங்கள் கட்சியில் யாரும் பேசாமல் தடுத்து வந்துள்ளோம். 

சரி, அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் நடந்த பல ஊழல்கள் தொடர்பாக அறப்போர் கொடுத்த புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி மற்றும் முன்னாள் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் IAS ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள்? 

* கார்த்திகேயன் அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து இருக்கோம். வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கொடுத்த அவகாசத்தை மதிக்காமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறோம். 

சரி, அதிமுக ஆட்சியில் கோவையில் புதிதாக கட்டப்பட்ட அரசு அலுவலக கட்டிடத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி தனது அறக்கட்டளை நடத்த மிகக்குறைந்த வாடகைக்கு ஆக்கிரமித்துள்ளதாக அறப்போர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுத்தீர்களா?

* இல்லை. அவர்களாக போவார்கள் என்று காத்துக் கொண்டு இருக்கிறோம். 

அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் பேருந்து நிறுத்தங்கள் கட்ட போடப்பட்ட டெண்டர்களில் செட்டிங் செய்து 400 கோடி ஊழல் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி அவர்களின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுத்தீர்களா?

* விசாரணை முடிந்து FIR போடப்படும் நிலையில் மேலிடத்து உத்தரவு கிடைக்காததால் மல்லாக்க படுத்து காத்துக் கொண்டு இருக்கிறோம். 

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும். ஆகையால் கதறாமல் பதறாமல் மக்கள் கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பியுங்கள் என்று அறப்போர் இயக்கம் பதிலடி கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor Iyakkam Reply to DMK Members


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->