மசூதியை குறிவைத்து இஸ்ரேல் குண்டு வீச்சு!...18 பேர் பலியானதாக பாலஸ்தீனம் அறிவிப்பு!
Israel bombarded the mosque palestine announced that 18 people were killed
இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை தாக்கி வந்தனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்ததில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது.
அதன்படி இஸ்ரேலில் உள்ள நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்த நிலையில், லெபனான் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதியை குறிவைத்து இன்று இஸ்ரேல் ல் குண்டுகளை வீசியது. இதில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் பலத்த காயமடைந்ததாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
English Summary
Israel bombarded the mosque palestine announced that 18 people were killed