தமிழக போலீசார் கஞ்சாவை தவிர மற்ற போதைப் பொருட்களில் ஒரு கிராம் கூட பறிமுதல் செய்வதில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

தென்காசியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தாவது, "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் கிலோ கணக்கில் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் பறிமுதல் செய்கிறார்கள்.

ஆனால், தமிழ்நாடு போலீசார் கஞ்சாவை தவிர மற்ற போதைப் பொருட்களில் ஒரு கிராம் கூட பறிமுதல் செய்வதில்லை. ஏனைய போதை பொருட்களை தமிழக போலீசார் கைப்பற்றவில்லை.

தமிழகத்தில் மத்திய அரசு ஏஜென்சிகள் மட்டுமே கஞ்சா அல்லாத பிற போதை பொருட்களை அதிக அளவில் கைப்பற்றுகின்றன.

40 ஆண்டுகளுக்கு  அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருந்த பஞ்சாப் மாநிலம், போதையால் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழக காவல்துறையால் ஒரு கிராம் அளவு கூட கஞ்சா தவிர்த்த பிற ரசாயன போதை பொருட்களை பிடித்ததாக தகவல்களே இல்லை" என்று ஆளுநர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor RN Ravi TN Police Ganja Narcotics Drugs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->