16 சக்கரம்! ஒரு கொலைக்கு காரணமான தமிழக அரசு...! அப்பாவியின் உயிரிழப்புக்கு பொறுப்பு ஏற்பாரா அப்பாவு? அறப்போர் இயக்கம் கேள்வி! - Seithipunal
Seithipunal


நெல்லையில் கல் குவாரியில் இருந்து கற்களை ஏற்றி செல்ல தடை விதிக்கப்பட்ட 16 சக்கர கனரக வாகனம் மோதி ஒருவர் பலியானதற்கு தமிழக அரசு தான் காரணம் என்று அரப்பூர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்த அறப்போர் இயக்கத்தின் செய்திக்குறிப்பில், "நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகள் மீது அறப்போர் கொடுத்த புகாரை அலட்சியம் செய்த திமுக அரசு, தற்பொழுது நெல்லை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை கூட பின்பற்ற திராணி இல்லாமல் ஒரு கொலைக்கு காரணமாகி உள்ளது. 

16 சக்கர கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த லாரியை அனுமதித்தது யார்? 

குவாரி முதலாளிகளுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக ஓடி வரும் சபாநாயகர் அப்பாவு ஒரு அப்பாவியின் உயிரிழப்புக்கு பொறுப்பு ஏற்பாரா? 

மூடப்பட்ட சட்ட விரோத குவாரிகளின் அபராதத்தை குறைத்து அவற்றை திறந்து விட வழி செய்த ஜெயகாந்தன் IAS இந்த கொலைக்கு பழி ஏற்பாரா?

தன்னுடைய துறையில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று பன்ச் பேசி பொழுதை கழிக்கும் அமைச்சர் துரை முருகன் கொலைப்பழியை ஏற்பாரா?

நடப்பது அனைத்தும் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இனியாவது இந்த கொள்ளைக்கும் கொலைக்கும் முடிவு கட்டுவாரா? 

உத்தரவு போட்டதோடு அதை காற்றில் பறக்க விட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் என்ன செய்ய போகிறார்" என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Kavalkinaru Illegal Quarry accident DMK Govt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->