தீபாவளி கொண்டாட முடியுமா? கொஞ்சம் இருங்க பாய்! தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! 15 மாவட்ட மக்கள் கவனம்!
Diwali Tamilnadu Rain Alert Weather update
தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று எடுத்துள்ள அறிவிப்பின்படி, இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் கன மழை உள்ளதாக கனமழைக்கு வாய்ப்புள்ளது..
தீபாவளி தினமான நாளை தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளது.
வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் இரண்டாம் தேதி கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது..
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Diwali Tamilnadu Rain Alert Weather update