மெத்தனப்போக்கில் அதிகாரிகள் செயல்படுவதா? அதிமுக உரிமை மீட்பு குழு கண்டனம்!
Are the authorities acting in a complacent manner? AIADMK Rights Restoration Committee
மெத்தனப்போக்கோடு செயல்படும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் மக்கள் நலன் கருதி அவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டும் என புதுவை மாநில அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு.ஓம்சக்திசேகர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து புதுவை மாநில அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு.ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :ஃபெஞ்சல் புயல் இதுவரை புதுவை மக்கள் சந்தித்திக்காத பல்வேறு இன்னல்களை புதுவை மாநிலத்தில் உண்டாக்கி சென்றது.உடனடியாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5000 வழங்கப்பட்டது ஓரளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அமைந்தது.
ஆனால் ஒன்றரை மாதங்கள் ஆகியும் இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செய்வதறியாது இருக்கும் நிலை உள்ளது. தொடர் விடுமுறை காரணமாகவும் துறையில் பணியாளர் குறைபாடு காரணமாகவும் கோப்புகள் செல்வதில் தேக்க நிலை ஏற்பட்டு பயிர் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று சொல்வது விவசாயிகளை மேலும் கவலை அடைய செய்துள்ளது. உடனடியாக அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோன்று புயல் பாதிப்பினால் முழுமையாகவும், சிறிய அளவில் வீடு இழந்தவர்களுக்கும் இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. இதற்கும் அதிகாரிகள் உரிய கணக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தியது காரணமாகும்.
அதே போல மாநிலத்தின் தலைமை பதவியில் இருக்கும் ஆளுநருக்கு அலுவலகம் அமைக்கும் பணி ஆறு மாத காலம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது சம்பந்தமாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை முதல்வர் கடிந்து கொண்ட விவகாரம் மிகவும் வேதனைக்குரியது. மாநில ஆளுநருக்கு இது போன்ற நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை என்பதை மக்கள் வருத்தப்படும் நிலையில் உள்ளது.
புதுச்சேரி பேருந்து நிலையம் இந்த மாதம் திறக்கப்படும் என்று அறிவித்து பின்னர் வழக்கு காரணமாக தள்ளிப் போவதாக அறிகிறோம். ஆரம்பத்திலேயே கடை ஒதுக்கீடுகள் குறித்து முறையான அறிவிப்பை அதிகாரிகள் குறிப்பாக நகராட்சி ஆணையர் செய்திருந்தால் பிரச்சனை இல்லாமல் போயிருக்கும் வேண்டுமென்று பிரச்சனை வரவேண்டும் என்று எண்ணியதாலேயே இப்போது நீதிமன்றம் வரை பிரச்சனை சென்று பேருந்து நிலையம் திறப்பு விழா தள்ளிப் போகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்களின் பார்வை என்னவென்றால் அரசு செய்ய நினைக்கும் எந்த மக்கள் நலப் பணிகளையும் அதிகாரிகள் முறையாக மேற்பார்வை செய்வதில்லை கடமையை உணர்ந்து பணி செய்யாமல் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் புதுச்சேரி முதல்வர் பல்வேறு சிரமங்களுக்கு இடையே அறிவிக்கும் திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுபோன்று மெத்தனப்போக்கோடு செயல்படும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் மக்கள் நலன் கருதி அவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டும் என புதுச்சேரி மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என புதுவை மாநில அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு.ஓம்சக்திசேகர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Are the authorities acting in a complacent manner? AIADMK Rights Restoration Committee