மதுபானக் கடையில் மும்மொழியில் அறிவிப்பு பலகையா? - தமிழக அரசு விளக்கம்.!
tn govt explain about trilingual notice board on tasmac
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் மதுபான கடைக்கான அறிவிப்பு பலகை மும்மொழியில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த பதிவில் 'ஒருவழியாக தமிழகம் மும்மொழி கொள்கையை டாஸ்மாக்கில் அறிமுகம் செய்துள்ளதாக' தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சமூக வலைதளத்தில் பரவி வரும் புகைப்படம் குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, "இது பழைய புகைப்படம். அதுமட்டுமல்லாமல் இந்தப் புகைப்படம் அகற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி அருகே உள்ள மதுபானக் கடையில் கடந்த ஆண்டு புதிதாக மதுக்கூடம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் அந்த பலகை 'பார்' உரிமதாரரால் வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் நடவடிக்கை மேற்கொண்டு பலகை அகற்றப்பட்டது. தற்போது எந்த 'போர்டும்' அந்த இடத்தில் இல்லை. பழைய புகைப்படம் தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
tn govt explain about trilingual notice board on tasmac