ஜெகபர் அலி கொலை: தி.மு.க. ஆட்சியில் கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகி விட்டது! பிரேமலதா சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரும் சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, திருமயம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து, திட்டமிட்ட கொலை என தெரிவித்துள்ள தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஜெகபர் அலி, புடுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத கனிம வள கொள்ளையை எதிர்த்து தொடர்ந்து போராடியவர். இவரால் ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை ஆதாரங்களுடன் மனு அளிக்கப்பட்டதாகவும், இதற்காக கனிம வள கொள்ளையர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில், திருமயம் போலீசார் குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். அவர்களின் விசாரணையில், ஜெகபர் அலி மீது லாரி ஏற்றி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேமலதா தனது அறிக்கையில், திமுக ஆட்சியில் இது போன்ற திட்டமிட்ட கொலைகள் அதிகமாகி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். ஜெகபர் அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் உண்மைக்காக குரல் கொடுத்ததற்காக உயிரிழக்க நேரிடும் நிலைமை உருவாகி இருப்பதற்கு அரசு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், “சட்டத்தை பின்பற்றாமல், மக்களுக்கான நீதிக்குரல் கொடுப்பவர்களை கொலை செய்யும் நிலைமை திராவிட மாடல் ஆட்சியின் தோல்வியைக் காட்டுகிறது,” என கண்டனம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து திமுக அரசு மக்களின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டும் என்று பிரேமலதா தனது அறிக்கையின் முடிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murder of Jagabar Ali DMK Murders in the regime have become commonplace Premalatha CPI Inquiry Request


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->