உங்ககிட்ட நிறைய 'சிம் கார்டு' இருக்கா.. அப்போ அபராதம் மற்றும் தண்டனைக்கு தயாரா இருங்க..!!
Are You Keeping Several Sim Cards Be Ready to be Fined
அனைத்தும் டிஜிட்டலாக மாறி வரும் இந்த காலத்தில் நம்மில் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்துள்ளனர். ஆனால் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருப்பது பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
2023ம் ஆண்டு தொலைத்தொடர்பு சட்டத்தின் படி ஒருவர் அதிகபட்சம் எத்தனை சிம் கார்டுகள் வைத்திருக்கலாம் என்றும், அதை மீறினால் என்ன தண்டனைகள் என்றும் சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒருவர் இத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் ஒருவர் 9 சிம் கார்டுகள் வரை வைத்திருக்கலாம். அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் உரிமம் பெற்றுள்ள சில பகுதிகளில் மட்டும் ஒருவருக்கான சிம் கார்டு வரம்பு 6 ஆக குறைக்கப் பட்டுள்ளது.
இதை மீறினால் முதல் முறை குற்றத்திற்கு ரூ. 50, 0000 அபராதமும், அடுத்தடுத்த முறைகளுக்கு ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் இந்த வரம்பை மீறினால், மோசடி செய்து சிம் கார்டுகளைப் பெற்றதாகக் கூறி ரூ. 50 லட்சம் வரை அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
மேலும் தொலைத்தொடர்புத் துறையானது ஒரு நபரின் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை சரிபார்க்க 'சஞ்சார் சதி' என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளது. www.sancharsathi.gov.in என்ற வலைப்பக்கத்திற்குச் சென்று உங்கள் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய அனைத்து சிம் கார்டுகளின் பட்டியலைக் காணலாம்.
English Summary
Are You Keeping Several Sim Cards Be Ready to be Fined