ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசிக-வின் முக்கிய புள்ளி? அதிரடியில் இறங்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் தற்போது வரை 27 பேரை தனிப்படை போலீசார் சிபிசிஐடி போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முதல் முக்கிய குற்றவாளியாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் கருதப்படுகிறார். மேலும், கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, சுரேஷின் மனைவி பொற்கொடி, பெண் தாதா மலர்கொடி, அஞ்சலை, ஹரிகரன் உள்ளிட்டவர்களும், அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் வெளிவந்துள்ளது. 

மேலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்தில் மற்றும் அவரின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாடு தப்பி சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விசிக பிரமுகரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் விசிக பிரமுகர், ரவுடி நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமனிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong Bsp case Saidapet VCK police enquiry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->