சிறையில் வைத்து ஸ்கெட்சா? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய ரவுடி, அரசியல்வாதி - பரபரப்பு தகவல்!
Armstrong case Ashwathaman Nagenthiran info CBCID Police
கடந்த மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் இதுவரை 22 பேர்களை கைது செய்துள்ளனர்.
நேற்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் தான் இந்த அஸ்வத்தாமன்.
ஆம்ஸ்ட்ராங் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் இந்த அஸ்வத்தாமன் காங்கிரஸ் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வபெருந்தொகையுடன் கலந்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அஸ்வத்தாமன் கைது குறித்து சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனிடம் வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான ஸ்கெட்ச் சிறையில் இருந்து போடப்பட்டதா? என கண்டறியும் பணியில் தனிப்படை போலீசார் இறங்கி உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
வெளியான அந்த தகவல்களின்படி, வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் இருந்து விவரங்களை பெற்ற தனிப்படை போலீசார், ரவுடி நாகேந்திரனை கடைசி ஒரு வருடமாக சந்தித்த நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், நாகேந்திரனை கண்காணிக்கும் தனி காவலரிடம் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் பெறப்பட்டு விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Armstrong case Ashwathaman Nagenthiran info CBCID Police