ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய புள்ளி சற்றுமுன் கைது! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். 

இந்த படுகொலை வழக்கில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளை கட்சியிலிருந்து அந்த அந்த கட்சிகள் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார், தற்போது வரை 23 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவே வெளியாகின்ற ஒவ்வொரு தகவலும் தெரிவிக்கின்றது. 

இந்த நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை நேற்று தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு குறித்து ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவரைக் கைது செம்பியம் போலீசார் செய்தனர்.

கைது செய்யப்பட்ட பொற்கொடியை செப்டம்பர் 02ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong Death case Arkadu Suresh Arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->