பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும்... எச்சரிக்கை விடுத்த முதல்வர் முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசிற்கும், டிஜிபிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, இயக்குநர் பா ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தமிழக அரசுக்கும், திமுகவுக்கும், திமுகவின் தலைவர் மற்றும் தமிழக முதல்வருக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும்,  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். வழக்கில் தொடர் தீவிர விசாரணை நடத்தி குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில்  தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை செயலாளர்  அமுதா,  டிஜிபி சங்கர் ஜிவால்,  சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் இருந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது X பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.

இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong hacked to Death MK Stalin Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->