தேனி: மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராதாகிருஷ்ணன் (59). இவருடைய மனைவி சரஸ்வதி (50). இந்நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து நேற்று முன்தினமும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆதிரமடைந்த ராதாகிருஷ்ணன் மனைவி சரஸ்வதியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சரஸ்வதி பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Army soldier arrested for assaulting wife and threatening to kill her in theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->