விண்ணை பிளந்த அரோகரா கோஷம்..அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்அண்ணாமலை உச்சியில் விண்ணை பிளக்கும் பக்தர்களின் கோஷம் முழுங்க மகாதீபம் ஏற்றப்பட்டது.மகா தீபத்தை காண்பதற்காக கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.திருவிழாவின் சிகர விழாவான மகா தீபத் திருவிழா இன்று நடைபெற்றது.இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. முதலில் ஒரு மடக்கில் ஏற்றப்படும் ஒற்றை தீபத்தால் ஒன்றே பரம்பொருள் என்பதையும், அதிலிருந்து பிற தீபங்களை ஏற்றுவதன் மூலம் ஏகன் அனேகன் என்பதையும் உணர்த்தும் வகையில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் கண்டனர்.

இன்று மாலையில் கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் தொடங்கின. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை ஏற்கனவே பூஜை செய்யப்பட்டு, பக்தர்களால் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அத்துடன் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் நெய், 1500 மீட்டர் நீள காடா துணியும் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. காடா துணியில் நெய் ஊற்றி அதை திரியாக்கி தீப கொப்பரையில் வைக்கப்பட்டு மகா தீபம் தயாரானது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் விண்ணை பிளக்கும் பக்தர்களின் கோஷம் முழுங்க மகாதீபம் ஏற்றப்பட்டது.

மகா தீபத்தை காண்பதற்காக கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டபோது பக்தர்கள் சிவ முழக்கம் எழுப்பி தரிசனம் செய்தனர்.கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் பக்தர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arohara chants split the sky Mahadeepam lit on top of Annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->