ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட துணை தாசில்தார்! சினிமா பாணியில் பொறி வைத்து கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார்! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய  ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழே பாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவி சக்திவேல். இவர் அந்தப் பகுதியில் திமுக வார்டு செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது மனைவி பெயரில் உள்ள பட்டா ஒன்றில் பெயர் திருத்தம் செய்ய மேற்கொள்வதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக மன்ற துணை வட்டாட்சியர் நாகராஜ் என்பவர் பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி ரூபாய் 15,000 பணத்துடன் நேற்று மாலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து துணை வட்டாட்சியர் நாகராஜ்ரிடம் கொடுத்துவிட்டு பின்னர் வெளியே வந்துள்ளார். அதனை அடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மறைந்திருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென உள்ளே சென்று நாகராஜை கையும் களவுமாக கைது செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நாகராஜ் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற அதிகாரியிடம் இரண்டு மணி நேரமாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தீவிர விசாரணை நடத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arrested deputy tahsildar who took bribe of Rs 15 thousand to change name in Patta in Tiruvarur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->