நாற்காலியில் பெண் பொறியாளரை தாக்க முயற்சி! ஊழியர்கள் போராட்டம்! திமுக பிரமுகர் கைது! - Seithipunal
Seithipunal


சிவகங்கையில் யூனியன் அலுவலகத்துக்குள் புகுந்து பெண் பொறியாளரை தாக்க முயற்சி செய்த திமுக பிரமுகர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகங்கையை அடுத்த கோவனூரை சேர்ந்த முருகன். இவர் திமுக ஒன்றிய நிர்வாகி என்று கூறப்படுகிறது. இவர் ஒப்பந்தரதாரராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் கோவனூர் பகுதியில் யூனியன் சார்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகையை பெறுவதற்காக சில நாட்களுக்கு முன் சிவகங்கை யூனியன் அலுவலகத்திற்கு முருகன் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவருக்கும் உதவி பொறியாளர் கிருஷ்ணகுமாரி என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் நாற்காலிகள் எடுத்து கிருஷ்ணகுமாரி தாக்கம் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக அங்கிருந்த மற்ற அலுவலர்கள் கிருஷ்ணகுமாரியை மீட்டு அழைத்துச் சென்றனர். மேலும் ஒப்பந்ததாரர் திமுகவை சேர்ந்த முருகனை கண்டித்து யூனியன் அலுவலகம் முன் பணியாளர்கள் பலர் போராட்டத்தை ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் அறிந்து அங்கு  விரைந்த போலீசார் அது குறித்து வழக்கு பதிவு செய்தனர். திமுக பிரமுகர் முருகனை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அலுவலகத்தில் பணிபுரியவர்கள் அறிவித்தனர். அதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான திமுக பிரமுகர் முருகனை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியேறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arrested for breaking into union office in Sivagangai and trying to attack woman engineer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->