தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ‘கலைஞர் நூலகம்’ - துணை முதல்வர் உதயநிதி தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ என்ற பேச்சுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

திமுக இளைஞர் அணி சார்பில் இளைஞர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்காக தமிழ் பேச்சாளர்களை கண்டறிய வேண்டியது என்று குறிப்பிட்டார். இதன்படி, 17 ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த போட்டிகளின் மூலமாக சிறந்த பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசு வழங்கினார். 

முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவை தொகுதிகளில் ‘கலைஞர் நூலகம்’ திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கிணங்க, ஏற்கெனவே 75 தொகுதிகளில் நூலகம் திறக்கப்பட்டுள்ளன, மேலும் அடுத்த 3 மாதங்களுக்குள் 234 தொகுதிகளிலும் நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Artist library in all 234 constituencies of Tamil Nadu Deputy Chief Minister Udayanidhi Information


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->